×

செய்யாறு, கண்ணமங்கலம், ஆரணியில் ₹12.64 கோடியில் துணை மின்நிலையம் : முதல்வர் திறந்து வைத்தார்

செய்யாறு, ஜன.30: செய்யாறு, கண்ணமங்கலம் மற்றும் ஆரணியில் ₹12.64 கோடியில் துணை மின் நிலையத்தை காணொளி காட்சியில் முதல்வர் திறந்து வைத்தார். செய்யாறு ஒன்றியம் பெரும்பள்ளம் கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தீனதயாள் உபத்யாய கிராம ஜோதி திட்டத்தில் 20 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ₹4 கோடி மதிப்பீட்டில் 33 கே.வி துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, துணைமின் வளாகத்தில் எம்எல்ஏ தூசி கே.மோகன் குத்துவிளக்கேற்றி மக்களின் பயன்பாட்டிற்காக துணை மின் நிலையத்தை தொடங்கி வைத்தார்.

இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அதிமுக பிரமுகர்கள் மற்றும் மின்வாரிய செயற்பொறியாளர் ரவிராஜன், உதவி செயற்பொறியாளர் உதவி பொறியாளர் பாலமுருகன், அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு செயலாளர் பொன்.பழனி, கம்பியாளர் பழனிவேல், மின்பாதை ஆய்வாளர்கள் கலைச்செல்வன், முருகன், பிரபாகரன், ரமேஷ், பெருமாள், பிச்சுமணி, வணிக ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த அழகுசேனையில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹4.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 33 கேவி புதிய துணை மின்நிலையத்தை முதலமைச்சர் நேற்று காணொளி காட்சியில் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மேற்கு ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆரணி செயற்பொறியாளர் சரஸ்வதி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சங்கர், வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் கே.டி.குமார் முன்னிலை வகித்தனர். உதவி மின்பொறியாளர் சிலம்பரசன் வரவேற்றார்.

மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் நாகராஜன் சுவிட்ச் ஆன் செய்து மின் இணைப்பை வழங்கினார். இதில் உதவி செயற் பொறியாளர்கள் ஜெயபாரதி, ஜெயலட்சுமி, திருமலை, ஊராட்சி தலைவர்கள் பிரபாவதி ஏழுமலை, வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ரவி, கவிதா பிரகாஷ், மின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி: ஆரணி அடுத்த அரியப்பாடி, சோமந்தாங்கல், சிறுமூர், செட்டித்தாங்கல், குருந்தாங்கல், பட்டாங்குளம், கீழ்நகர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் போதிய மின்சப்ளை பற்றாக்குறையால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் அப்பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, மத்திய அரசின் தீனதயாள் உபாத்தியாய கிராம யோஜன திட்டத்தின் கீழ் ₹4.25 கோடி நிதி ஒதுக்கீடு புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் முடிந்து கடந்த ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடந்தது.

இந்நிலையில், புதிய மின்நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை காணோலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். இதையொட்டி, மேற்பார்வையாளர் நாகராஜன் பூஜை செய்து மின் நிலையத்தை தொடங்கி வைத்தார். இதில் செயற்பொறியாளர் சரஸ்வதி, திமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : power station ,Chief Minister ,Cheyyar ,Kannamangalam ,Aranya ,
× RELATED தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ₹9 லட்சம் காப்பர் வயர் திருட்டு